பொங்கல் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை அமலா பால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால்.
‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மைனா’ படம் அவருக்கு தனி அடையாளத்தை அளித்தது. 2011-ம் ஆண்டு வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அமலா பால். அதன் பிறகு ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் நடித்தார்.
‘அம்மா கணக்கு’, ‘ஆடை’, ‘கடாவர்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆடுஜீவிதம்’. இதேபோல், அமேசான் பிரைம் OTT இல் வெளியான ‘லெவல் கிராசிங்’ என்ற மலையாளப் படத்தில் அமலா பாலின் நடிப்பு பாராட்டப்பட்டது. அவர் சமீபத்தில் ஜெகத் தேசாயை மணந்தார். அவர்கள் தங்கள் குழந்தைக்கு ‘இலை’ என்று பெயரிட்டனர்.