சென்னை: நடிகர் மஹத் நடிக்கும் காதலே காதலே படத்தின் ஆசை பாடல் வெளியாகி உள்ளது.
மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்பொழுது மஹத் அடுத்ததாக `காதலே காதலே’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர். இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே’ படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசை பாடலின் வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்பாடலை வியன் புகழேந்தி வரிகளில் விஷால் சந்திரசேகர் பாடியுள்ளார் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.