சென்னை: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் ஜாக்குலின் கதறி அழுதார்.
விஜய் டிவி புகழ் ஜாக்குலின் பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வந்தார். இந்த வாரம் ஷோ நிறைவடையும் நிலையில் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதில் போட்டியாளர்கள் ஓடிச்சென்று கதவுக்கு வெளியில் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வரவேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் திரும்பவில்லை என்றால் அந்த போட்டியாளர் எலிமினேட் ஆவர்.
இன்று நடந்த டாஸ்கில் ஜாக்குலின் பணப்பெட்டியை எடுக்க ஓடினார். ஆனால் அவர் வீட்டுக்குள் திரும்பி வர இரண்டு நொடிகள் தாமதம் ஆகிவிட்டது. அதனால் அவர் எலிமினேட் ஆவதாக பிக் பாஸ் அறிவிக்க, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஜாக்குலின் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
கண்ணீருடன் தான் அவர் தனது கோப்பையை உடைத்துவிட்டு வீட்டை விட்டு சென்று இருக்கிறார்.