மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி மற்றும் மெக்சிகோவின் மிகுல் ஏஞ்சல் ரியேஸ்-வரேலா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில், ஸ்ரீராம் பாலாஜி மற்றும் மிகுவல் ஏஞ்சல் ரியேஸ்-வரேலா ஜோடி நெதர்லாந்தின் ராபின் ஹாஸ் மற்றும் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் நெடோவ் யசோவ் ஜோடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீராம் பாலாஜி மற்றும் மிகுல் ஏஞ்சல் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.