சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு ஏராளமான வளங்கள் இருந்தும், ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் முன்னணியில் இருந்த தமிழகம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மரபுசாரா எரிசக்தியே உலகின் எதிர்காலம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால், அதை மேம்படுத்த தனி அமைச்சகம் தேவை. அத்தகைய அமைச்சகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியத்தில் நிறுவப்பட்டது. ஆனால், தமிழகத்தில் இன்று வரை மரபுசாரா எரிசக்தித் துறை தொடங்கப்படவில்லை.
எனவே, அவர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு, தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகரிக்க தனிக் கொள்கைகளையும் வகுக்க வேண்டும்.