By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் கோளாறு: பயணம் ரத்து
    1 Min Read
    மீண்டும் கர்நாடகாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா
    1 Min Read
    ராஜஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திருப்பிவிடும் புதிய திட்டம்: கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு..!!
    2 Min Read
    விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
    1 Min Read
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஸ்டாலின் புகழ் ஆப்பிரிக்கா வரை பரவல்: பழங்குடியினர் பாராட்டும் வீடியோ வைரல்
    1 Min Read
    திமுக கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை
    1 Min Read
    மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை
    1 Min Read
    அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்
    1 Min Read
    அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஷேக் ஹசீனா தெரிவித்த அதிர்ச்சி தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > ஷேக் ஹசீனா தெரிவித்த அதிர்ச்சி தகவல்
இந்தியா

ஷேக் ஹசீனா தெரிவித்த அதிர்ச்சி தகவல்

Nagaraj
Last updated: January 18, 2025 4:15 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

மேற்கு வங்கம்: 20 நிமிட இடைவெளியில் மரணத்திலிருந்து தப்பினோம் என்று ஷேக் ஹசீனா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும் மாணவர்கள் பல வாரங்களாக நடத்திய போராட்டங்கள் மற்றும் மோதல்களில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

இட ஒதுக்கீட்டை ரத்து செய்தபோதிலும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று உறுதியாக இருந்த மாணவர்களை சமாதானப்படுத்தமுடியவில்லை. இறுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அனைத்தையும் சூறையாடினர்.

தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரை திரும்ப அனுப்ப வங்கதேசத்தில் உருவாகியுள்ள முகமது யூனுஸ் தலைமையான இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தருணத்தில், தன்னையும், தனது தங்கையான ஷேக் ரெஹானாவையும் கொல்ல எதிர்கட்சியினரால் சதி நடந்ததாக 76 வயதாகும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது மேற்கு வங்க அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் ஷேக் ஹசீனா பேசும் ஆடியோ உரை ஒன்று நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், “ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம் – 20-25 நிமிட இடைவெளியில் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்” என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்தது கடவுளின் செயல் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

2004, ஆகஸ்ட் 21 நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், கோட்டலிபாராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், இறுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பித்தது கடவுளின் விருப்பம். இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.

அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பின்னர் பார்த்தீர்கள். நான் எனது நாடு இல்லாமல் இருக்கிறேன், எனது வீடு எரிக்கப்பட்டது, நான் கஷ்டப்பட்டாலும், என்னை கடவுள் உயிருடன் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் குரலில் ஷேக் ஹசீனா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 21, 2004 அன்று டாக்கா பங்கபந்து அவென்யூவில் அவாமி லீக் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஷேக் ஹசீனா, 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் டிரக்கின் பின்புறத்தில் இருந்து உரையாற்றி முடித்த பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஹசீனாவுக்கும் சில காயங்கள் ஏற்பட்டன.

முன்னதாக கோட்டலிபாராவில் உள்ள கல்லூரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலையில், ஷேக் ஹசீனா உரையாற்ற இருந்த பகுதியில் 40 கிலோ வெடிகுண்டு மீட்கப்பட்டது.

இறுதியாக ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி புறப்படும் சமயத்தில் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர்தப்பியதாக கூறியுள்ளார். முந்தைய கொலை முயற்சிகளையும், கடைசியாக உயிர்தப்பிய நிகழ்வையும் ஷேக் ஹசீனா உருக்கமான முறையில் விவரித்த ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

You Might Also Like

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் கோளாறு: பயணம் ரத்து

மீண்டும் கர்நாடகாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா

ராஜஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திருப்பிவிடும் புதிய திட்டம்: கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு..!!

விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு

TAGGED:Assassination attemptgapSheikh Hasinashockviolentஅதிர்ச்சிஅதிர்வலைஇடைவெளிகொலை முயற்சிஷேக் ஹசீனா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

என் வார்த்தைகள் ஏன் பெரிதுபடுத்தப்பட்டன? பாத்திமா சனா ஷேக்

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?