மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக விவசாய அணி நிர்வாகி முத்துராமன் திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அறநிலையத் துறையே இருக்காது. மீனாட்சி அம்மன் கோவில் நடைபாதையில் முதல்வர் நடந்து சென்றாலே தெரியும், மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்று.
அறநிலையத்துறையை அகற்றுவோம் என்கிறோம். எத்தனை பேர் ஏற்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிரதமர் தமிழகம் வரும்போது போட்டி போட்டுக்கொண்டு கைகுலுக்குகிறார் முதல்வர். அந்த கைகுலுக்கல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பை மறைக்க ஆளுநரை பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயம் போல உரித்தால், ஒன்றும் இருக்காது. சவுக்கு மீது சந்தேகம் உள்ள திமுக அமைச்சர்கள் என் வீட்டுக்கு வரலாம்.
சாட்டையை எடுத்து ஆறு முறை அல்ல, இரண்டு முறை அடித்தால், அது பஞ்சில் செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதாவது ஒன்றா என்று தெரியும்!. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியே கூறியுள்ளார். திராவிடர் மாதிரி ஆட்சியில் டாஸ்மாக் தான் நம்பர் ஒன். 24 மணி நேரமும் செயல்படும் மதுக்கடைகளை காட்டுகிறேன். தமிழகம் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நகர பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.