புதுடெல்லி: இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றார். அப்போது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு சான்று என பதிவிட்டுள்ளார்.