வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளிவந்த ‘வாத்தி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் 2023-ல் வெளியானது. இப்போது மீண்டும் தனுஷ் மற்றும் வெங்கி அட்லுரி இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இந்தப் படத்தை நாக வம்சியே தயாரிக்க முன் வந்துள்ளார். அதற்கு ‘ஆனஸ்ட்ராஜ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ஆனஸ்ட்ராஜ்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த டைட்டிலுக்கு சத்யஜோதியிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.
முன்னதாக, ‘வாத்தி’ படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கியவர் வெங்கி அட்லுரி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்க தயாராகிவிட்டனர். இந்நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.