வில்லியனூர்: ஓசுதேரி பாரத் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி சார்பில், சர்வதேச பிளாஸ்டிக் இல்லா தினத்தையொட்டி, வில்லியனூரில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. துவக்க விழாவிற்கு பள்ளி முதல்வர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார்.
விழிப்புணர்வு ஊர்வலத்தை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி கொடியசைத்து துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருகாமீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு வீதிகள் வழியாக சென்றது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.