விஜ்க் ஆன் ஜி: டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி.குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜி நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய குகேஷ், 42-வது நகர்த்தலில் அனிஷ் கிரியை வீழ்த்தி முழுப் புள்ளியும் பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.ஹரிகிருஷ்ணா சக நாட்டு வீரர் அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தினார். இந்தச் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் நேடிர்பெக் அப்துசடோரோவுடன் டிரா செய்தார். இந்திய செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி அர்ஜென்டினாவின் ஓரா பவுஸ்டினோவை வீழ்த்தினார், உஸ்பெகிஸ்தானின் நேடிர்பெக் இந்தியாவின் திவ்யா தேஷ்முக்கை தோற்கடித்தார்.