ஊட்டி: நீலகிரியில் 200 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய ஜான் சல்லிவன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், ஊட்டி என்ற நவீன நகரை உருவாக்கினர். ‘ஸ்டோன் ஹவுஸ்’ என்ற முதல் கல் பங்களாவை உருவாக்கி பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கினர். ஊட்டி முனிசிபாலிட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சிறிய மலையில் முதல் போலீஸ் ஸ்டேஷன் கட்ட திட்டமிட்டு, 1850-ல் கட்டுமான பணி முடிந்தது.
1860-ல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட துவங்கியது.ஊட்டியில் இதுவே முதல் போலீஸ் ஸ்டேஷன். 1900-களின் முற்பகுதியில், கேரளாவில் தீவிரமாக இயங்கி வந்த ‘மாப்லா புரட்சி’ குழுவால் காவல் நிலையம் தாக்கப்பட்டது. 1921-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 2005ம் ஆண்டு தொடர்ந்து செயல்பட்டு வந்த காவல் நிலையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பியது.
குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், இயற்கை காட்சிகள் உள்ளிட்ட வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக, கட்டடத்தின் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டு, உதகை பி-1 காவல் நிலையம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய கட்டிடம் காவல் துறை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், காவலர்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட வண்ணமயமான ஓவியங்களுடன் தயாராகி வரும் இந்த பழைய காவல் நிலைய கட்டிடம் விரைவில் குழந்தைகள் பராமரிப்பு மையமாக பயன்படுத்தப்படும். 175 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்ததாக இருந்தாலும், கட்டிடம் நிலையானதாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.