மெல்போர்ன்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்தை எட்டிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் கோகோ கோப், ஸ்பெயினின் பவுலா படூசாவை எதிர்கொண்டார்.
இதில் பவுலா படோசா 5-7, 6-4 என்ற நேர் செட்களில் கோகோ கோப்பை வீழ்த்தினார். இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பவுலா படோசா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.