புதுடில்லி: அக்னிவீர் திட்டத்தில் சேர வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்யப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அக்னிபாத் திட்டத்தின்கீழ் அக்னிவீர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 21ல் இருந்து 23 ஆக அதிகரிக்க அரக்கு ராணுவம் பரிந்துரைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டதாரிகளின் தொழில்நுட்ப திறனை ராணுவத்தில் பயன்படுத்த வயது வரம்பு அதிகரிப்பு உதவும் என ராணுவ உயரதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அக்னிவீர் வீரர்களின் பணிக்காலம் முடிந்ததும் ராணுவத்தில் சேர்க்கப்படுவோரை 25 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக அதிகரிக்கவும் ராணுவத் தரப்பில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.