அமெரிக்கா: பதவி விலகினார் ….. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39) பதவி விலகியுள்ளார்.
அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி நியமிக்கப்பட்டனர்.
இருவரும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர். முதலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட முனைந்த ராமசாமி, பின்னர் அந்த போட்டியில் இருந்து விலகினார்.
இவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் விதமாகவே டிரம்ப் DODGE துறையை உருவாக்கி இவர்களை தலைவர்களாக்கினார். ஆனால் தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.