சென்னை: “வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் சர்வதேச ஆய்வு மைய கட்டிடங்கள் கட்ட தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக பாஜக சார்பில் வரவேற்கிறோம். கடந்த ஆண்டு வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு வள்ளலார் பக்தர்கள், பா.ஜ.க., மற்றும் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, வள்ளலார் பெருவெளி தத்துவத்திற்கு எதிரானது என கூறி போராட்டங்களை நடத்தினர்.
பா.ஜ.க.வின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் வினோத் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சர்வதேச மையக் கட்டிடங்கள் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை நிலுவையில் இருக்கும்போதே, சத்தியஞானசபைக்கு சற்று தள்ளி ஒரு பகுதியில் சர்வதேச மையக் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கியது தமிழக அரசு.
இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்தும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் சகோதரர் வினோத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வள்ளலார் பன்னாட்டு ஆராய்ச்சி மையக் கட்டடங்கள் கட்ட இடைக்காலத் தடை விதித்து இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய கட்டிடங்கள் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும்.
வள்ளலார் பெருமான் பக்தர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பொது வழிபாட்டு முறையை சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு அடி. வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையக் கட்டமைப்புகள் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்றும் பக்தர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.