டெல்லி: யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 5 நாட்கள் மெயின் தேர்வுகள் நடைபெறும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 979 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டு யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் கட்ட தேர்வு மே 25-ம் தேதி நடக்கிறது முதல் நிலை தேர்வை பொறுத்தவரை, பொது அறிவு தேர்வு முதல் தாள் காலை 9:30 முதல் 11:30 மணி வரையிலும், இரண்டாம் தாள் திறனறிவு தேர்வு மதியம் 2:30 முதல் 4:30 வரையிலும் நடைபெறும்.
பிற்பகல். விண்ணப்பதாரர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதேபோல், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மெயின் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரர்களின் கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை தேவையான அளவு பென்டிரைவில் எடுத்துச் செல்ல வேண்டும். முதல் கட்ட தேர்வுக்காக மொத்தம் 80 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.