சென்னை: ஜெய் நடித்துள்ள பேபி & பேபி படத்தின் ‘என்ன தவம்’ பாடல் வெளியானது
நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இப்படத்தின் ‘என்ன தவம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் அரிஷ் ராகவேந்திரா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.