சென்னை: முகத்தில் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு எப்பொழுதுமே முதலிடம் உண்டு. முகத்தை நீங்கள் என்ன தான் அழகு படுத்திக் கொண்டாலும் எவ்வளவு தான் நேர்த்தியாக உடை அணிந்து கொண்டாலுமே கூட, கண்கள் பார்க்க பளிச்சென்று பிரகாசமாக இல்லாமல் கருவளையம் விழுந்து சோர்ந்து காணப்பட்டால் முகம் நன்றாக இருக்காது. ஆகையால் முதலில் கண்கள் எப்பொழுதும் சோர்வு இல்லாமல் பிரகாசமாக கண்களை சுற்றி கருவளையம் இன்றி கவனமாக பார்த்துக் கொண்டால் தான் நீங்கள் எளிமையாக அலங்காரம் செய்து கொண்டால் கூட மிகவும் அழகாகவே தெரிவீர்கள்.
கண் கருவளையம் நீங்க இதற்கு ஒரு முழு நீள கற்றாழை மடலை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோல் நீக்கி நான்கு ஐந்து முறை தண்ணீரில் சுத்தமாக கழுவிய பிறகு ஜெல்லை எடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து 1 கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவை சேர்த்து ரெண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டரும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பற்ற வைத்து மிதமான தீயில் வைத்த பிறகு நாம் அரைத்து ஊற்றி ஆலுவேரா ஜெல்லை வையுங்கள். அது லேசாக சூடான உடன் நாம் ஏற்கனவே கரைத்து வைத்த சோலமாவு கரைசலையும் மெதுவாக ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். மேலும் இத்தனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேருங்கள். இந்த ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் இந்த கிரீம் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். அடுத்து இத்துடன் அரை எலுமிச்சை பழ சாறையும் கலந்து லேசாக சூடானதும் அடுப்பை அணைத்து விடுங்கள் இது நன்றாக ஆறட்டும்.
அதன் பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் தினமும் இரவு தூங்கும் முன்பு முகத்தை சுத்தம் செய்த பிறகு உங்கள் கண்களை கருவளையத்தின் மேல் இந்த கிரீமை தடவி விட்டு உறங்கி விடுங்கள். 1 வாரத்திற்குள் தொடர்ந்து போடும்போது கருவளையம் முற்றிலுமாக மறைந்து முகம் பிரகாசமாக இருக்கும்.