ரஞ்சிக் கோப்பை 2024-25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இன்று துவங்கியது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் முதல் இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். மறுபுறம் டெல்லி மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு ராணா 0, சங்வான் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் யாஷ் துள், கேப்டன் ஆயுஸ் படோனி ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாட முயற்சித்தார்கள்.
ரவீந்திர ஜடேஜா அவர்கள் இருவரையுமே நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா முறையே 44, 60 ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அடுத்ததாக வந்த டெல்லியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் 1 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் மயங் குசைன் 38* ரன்கள் எடுத்தும் டெல்லியை 188 ரன்களுக்கு சௌராஷ்ட்ரா சுருட்டி வீசியது. சௌராஷ்ட்ரா அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 மற்றும் தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 17.4 ஓவரில் 66 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய துவங்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய் நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம் சய்ரங் ஜானி 11, நம்பிக்கையின் நட்சத்திரம் புஜாரா 6, செல்டன் ஜாக்சன் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அப்போது களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி மூன்று சிக்சர்களை பறக்க விட்டு 38 (36) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய தேசாய் சதத்தை நழுவ விட்டு 93 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
இறுதியில் நிறைவு வந்த முதல் நாளில் 163-5 ரன்கள் எடுத்துள்ள சவுராஷ்டிரா இன்னும் 25 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக முதல் நாளிலேயே அசத்தியுள்ளார். 10 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த போட்டியில் ரோகித் சர்மா ஆட்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு அவருடைய ஆட்டம் கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது.