திருமலையில் பிப்ரவரி 4-ம் தேதி ரதசப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆந்திர மாநிலம் திருமலையில் பிப்ரவரி 4-ம் தேதி ரதசப்தமி விழா கொண்டாட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக அலுவலர் சியாமளா தலைமையில் அனைத்து தேவஸ்தானத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நேற்று நடந்தது.
பின்னர், அதிகாரிகள் மாட வீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ரதசப்தமி திருமலையில் மினி பிரம்மோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் அன்றைய தினம் உற்சவரன் மலையப்பர் 7 வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்ரவரி 4-ம் தேதி காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபா வாகனத்தில் மலையப்பர் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, காலை 9-10 மணி முதல் சின்ன சேஷ வாகனத்திலும், 11-12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1-2 மணி வரை அனுமன் வாகனத்திலும் மலையப்பர் 4 வீதிகளில் உற்சவத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 – 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இறுதியாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரப வாகனத்திலும் மலையப்பர் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் விடுதிகளுக்கு ஆன்மிக பெயர்கள்: திருமலையில் உள்ள கோவிலுக்கு தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் ஓட்டல்களை கட்டியுள்ளனர்.
இந்த ஹோட்டல்களுக்கு அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், தங்கும் விடுதிகளுக்கு பெருமாள், தாயார் என ஆன்மிக பெயர்கள் சூட்ட தேவஸ்தான அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினரும், எம்எல்ஏவுமான பிரசாந்திக்கு சொந்தமான விசிஆர் விடுதிக்கு முதலில் லட்சுமி பவன் என்று பெயர் சூட்டப்பட்டது. திருமலையில் தனியாருக்கு சொந்தமான 45 தங்கும் விடுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.