கேரளா: சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தானே வந்து கொலை குற்றவாளி சரணடைந்த விநோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய கொலை குற்றவாளி தற்போது மீண்டும் சிறைக்கு வந்து சரணடைந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் கேரளாவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் இருந்து 1991ம் ஆண்டு கொலை குற்றவாளி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு காவல்துறையினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 34 ஆண்டுகள் கழித்து, தற்போது 65 வயதில் கொலை குற்றவாளி மீண்டும் சிறைக்கு திரும்பி சரணடைந்துள்ளார். “தனது இறுதி காலத்தை சிறையில் கழிக்க விரும்புகிறேன்” என அவர் கூறியதாக தெரிகிறது.