விஜய் நடித்த GOAT திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்ணிகள்’ சில நாட்களுக்கு முன் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து AI உருவாக்கிய பவதாரணி பாடியுள்ளார். இந்தப் பாடல் குறித்து யுவன் பேசுகையில், “இந்தப் பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் பாடலை நானும் வெங்கட் பிரபுவும் இசையமைத்தபோது பவதாரணி மருத்துவமனையில் இருந்தார்.
அவர் குணமடைந்ததும், அவரை பாட வைக்கலாம் என நினைத்தோம். ஆனால் ஒரு மணி நேரத்தில் அவர் இறந்த செய்தி வந்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதைச் செய்ய என்னுடன் உழைத்த குழுவினருக்கு நன்றி” என்றார்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கங்கை அமரன், “கோட் படத்தில் பவதாரணியின் குரலை கேட்டதும் அனைவரும் திகைத்து போனோம். அண்ணனும் (இளையராஜா) ஒரு மாதிரி ஆனார். பவதாரணி மோசடி இல்லாத நல்ல பெண். அவள் எங்கும் இல்லை என்பதை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. அந்த பாட்டில் பவதாரணி இருப்பது பெரிய விஷயம்.