பெங்களூரு: மாற்று நிலம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி, நிலத்தை விற்பனை செய்த தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்க இயக்குனரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் இருந்து 3.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனிடையே, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மனுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மூடா வழக்கு விசாரணை குறித்து பேசிய முதல்வர் சித்தராமையா, அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏன் இவ்வளவு அவசரம் என்று அமலாக்க இயக்குனரகத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இது அரசியல் உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு. “அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.