பிரிட்டன்: பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது என்று பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். இது தவிர துணைப் பிரதமர் பதவி ஏஞ்சலா ரெய்னருக்கு கிடைத்துள்ளதோடு, அவருக்கு சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சராக பதவியேற்ற ரேச்சல் ரீவ்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். இது என்ன பொறுப்பைக் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன். அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்புடன் வருகிறது. இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்கள் லட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை இன்று காட்டட்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.