பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் “தங்கல்” படத்தில் நடித்தவர், சமீபத்தில் தனது காஸ்டிங் கோச் அனுபவத்தை பகிர்ந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “அவ்வை சண்முகி” படத்தின் இந்தி ரீமேக்கான “சாச்சி 420” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பாத்திமா, தென்னிந்திய மொழிகளில் குறைவான படங்களில் தான் நடித்துள்ளார்.

அமீர்கான் தனது 2வது மனைவியை விவாகரத்து செய்த பிறகு, அவர் பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யப் போகின்றார் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் பல பாலிவுட் மீடியா வதந்திகளை கிளப்பின. ஆனால், அதற்கான எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை. தற்போது, 33 வயதான பாத்திமா, இன்னும் திருமணம் செய்யவில்லை.
பாத்திமா சனா ஷேக், “தங்கல்” படத்தில் கீதா போகத் என்ற மல்யுத்த வீராங்கனையின் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியவர். அதன் பின்னர், அவர் “தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்” படத்தில் ஹீரோயின் ரோலில் நடித்தார்.
நடிகை, தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகம் நடிக்காததற்கு காரணமாக, சில சவுத் தயாரிப்பாளர்கள் தன்னிடம் அத்துமீறி நடிக்க முயன்றதாகவும், படுக்கைக்கு அழைக்கும் விதமாக பேசினார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த அனுபவத்தால், பல படங்களை தவிர்த்துவிட்டேன் என்று அவர் தெரிவிக்கிறார்.
2015ஆம் ஆண்டில் “நின்னு நேனு ஒக்கட்டவுடம்” படத்தில் தெலுங்கில் நடித்த பாத்திமா, அதன் பின்னர் தென்னிந்திய படங்களில் நடித்துப் பார்ப்பதில்லை. குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள சில சினிமா பிரபலங்களை குறித்தே அவர் இந்த புகாரை வெளியிட்டுள்ளார்.