மதுரை விளாங்குடி, மாடகுளம் பகுதிகளில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகள் சித்தன், கதிரவன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிரந்தர கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், தனியார் நிலங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகம் முழுவதும் அனைத்து பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டார். கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதை நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும்.