மேஷம்: எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள்.
ரிஷபம்: ஆன்லைன் வர்த்தகங்களில் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணம் குறித்து யோசிப்பீர்கள்.
மிதுனம்: நல்ல செயல்களுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் பெறுவீர்கள்.
கடகம்: வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கடன் செலுத்த முயற்சிப்பீர்கள்.
சிம்மம்: காதல் விவகாரத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றம் காண்பார்கள். நில முதலீடு செய்வீர்கள்.கன்னி: நீண்ட தூரப் பயணங்களில் பாதுகாப்பாக இருக்கவும். வேலை காரணமாக குடும்பத்திலிருந்து பிரியும் சூழ்நிலை உருவாகலாம்.
கன்னி: நீண்ட தூரப் பயணங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மாமியார் – மருமகள் விவாதங்கள் மன அழுத்தம் தரக்கூடும். வேலை காரணமாக குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
துலாம்: மனக்கவலை அதிகரிக்கலாம். தொழிலுக்கு தேவையான நிதியை ஏற்படுத்த முயற்சிப்பீர்கள். உறவுகளில் விலகல் ஏற்படலாம்.
விருச்சிகம்: கூட்டாகச் செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.
தனுசு: நண்பர்களின் பிரச்சினைக்கு உதவ வேண்டிய நிலை உருவாகும். வியாபாரிகள் உழைப்பால் முன்னேற்றம் காண்பார்கள்.
மகரம்: சொற்பொழிவு திறமையால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் சாதனை படைப்பார்கள்.
கும்பம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமம் எதிர்கொள்ள நேரிடும். வேலை சார்ந்த அலைச்சல் இருக்கும்.
மீனம்: நினைவாற்றல் குறைவு காரணமாக வாய்ப்புகளை இழக்கலாம். வியாபாரிகள் ஏற்ற நிலையை அடைவார்கள்.