புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் திரவுபதி முர்மு எக்ஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகளுடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்று நான் கடற்கரையில் நடக்கும்போது, மெல்லிய காற்று, அலைகளின் சத்தம் மற்றும் தியான அனுபவத்தை உணர்ந்தேன்.
நேற்று பூரி ஜெகநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது அமைதியை உணர்ந்தேன். இன்று கடற்கரையில் அதே அனுபவம். கோடை காலத்தில், இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான வெப்ப அலைகளை சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. வரும் தசாப்தங்களில் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாசுபாடு பெருங்கடல்களையும் அங்கு காணப்படும் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் திரவுபதி முர்மு எக்ஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகளுடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்று நான் கடற்கரையில் நடக்கும்போது, மெல்லிய காற்று, அலைகளின் சத்தம் மற்றும் தியான அனுபவத்தை உணர்ந்தேன். நேற்று பூரி ஜெகநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது அமைதியை உணர்ந்தேன். இன்று கடற்கரையில் அதே அனுபவம்.
கோடை காலத்தில், இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான வெப்ப அலைகளை சந்தித்தன. சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. வரும் தசாப்தங்களில் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாசுபாடு பெருங்கடல்களையும் அங்கு காணப்படும் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு திராருபதி முர்மு கூறியுள்ளார். முர்மு கூறியுள்ளார்.