டெல்லி: தனது குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையத்தில் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
யமுனை நதியில் ஹரியானா அரசு நச்சு கலந்து மாசடைய வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இதற்கு தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்துள்ள கெஜ்ரிவால், “ஹரியானாவில் இருந்து விஷம் கலந்தது என்ற எனது முந்தைய கருத்துகள், டெல்லிக்கு வழங்கப்படும் நீரில் ஆபத்தான அளவில் அமோனியாவின் அளவு அதிகரிப்பதை குறித்து மட்டுமே சொல்லப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைதான் தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.