புதுடெல்லி: பயணிகளின் லக்கேஜ்களை தவற விடுவதில் உலகின் முன்னணி விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருப்பதாக ‘லக்கேஜ் லோசர்ஸ்.காம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைந்த லக்கேஜ் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவனம் விமான நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.
அதன் தரவுகளின்படி, ஏர் இந்தியா கடந்த மாதம் 50,001 லக்கேஜ்களை தவறவிட்டது. மேலும், ஏர் இந்தியா ஒவ்வொரு 36 லக்கேஜ்களில் ஒன்றை தவறவிடுகிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான லக்கேஜ்களை இழந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் 72 லக்கேஜ்களில் ஒன்றை தவறவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை அடுத்து வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ், ஏர் லிங்க்ஸ் ஆகியவை உள்ளன.