சென்னை: குரங்கு டான்ஸ் ஆடுவது போல் ஆடுகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை சேர்ந்த புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ் ஆடுவது போல் சீமான் ஆடுகிறார்” என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் புகழேந்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில், “பெரியாரை சீமானை விட புகழ்ந்தவர் யாருமில்லை. சீமான் குழம்பி போய் உள்ளார். க்ஷ
பிரபாகரன் தான் சீமானுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்ததாக கூறுகின்றனர். பிரபாகரனுக்கு வேறு வேலை இல்லையா?. இப்படிப்பட்ட ஆட்களை வளர விட்டால் தமிழ்நாட்டிற்கு தீமைதான்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.