சென்னை: விஜய்யிடம் இருந்து அஜித்துக்கு வாழ்த்து வந்தது என்று சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
துபாய் கார் ரேஸில் அஜித் வெற்றி பெற்றதற்கும், பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அஜித், விஜய் இடையே ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. ஆகையால் விஜய் சார் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை” என்றார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஏதேனும் ஒரு வதந்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் அஜித் கார் ரேஸில் ஜெயித்ததற்கு, அரசின் விருது பெற உள்ளதற்கும் விஜய் பாராட்டு தெரிவிக்கவில்லை என்றும் உலா வந்த செய்திகளுக்கு சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.