புதுடெல்லி: பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் புதிய அறிவிப்புகள், 3.2 கோடி நடுத்தர வருமான வரி செலுத்துவோரையும், 7.65 கோடி பீகார் வாக்காளர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.
பட்ஜெட்டில் 4.9 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை, திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் 4.8 சதவீதமாக குறைந்துள்ளதால் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. இதற்காக நாட்டின் பொருளாதாரம் பெரும் விலை கொடுக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்று சொன்னதை நம்பாதவர்கள் இப்போது உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். மத்திய பாஜக அரசிடம் புதிய யோசனைகள் எதுவும் இல்லை. 1991, 2004-ல் செய்தது போல் நாங்கள் எதையும் செய்யவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.