சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. சில தினங்களுக்கு முன் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது ‘மை லார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தற்போது தொடங்கியுள்ளது. முதலில் சசிகுமார் காட்சிகளின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நீரவ் ஷா இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
‘ஜப்பான்’ படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘மை லார்ட்’. தோல்வியில் இருந்து மீள்வதற்காக கதைக்கு முழு முக்கியத்துவம் கொடுத்து படத்தை முடித்துள்ளார். இறுதிக்கட்டப் பணிகளை முடித்து விரைவில் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.