தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக கேரள நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலியின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி மீது கேரள மருத்துவ ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
அதில், நிறுவனம் விளம்பர விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, கிரிமினல் வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராகாததால், கேரள பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் திவ்யா பார்மசியின் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டாவதாக பாலகிருஷ்ணன், மூன்றாவதாக ராம்தேவ் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.