மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐயின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சி.கே நாயுடு விருது பெற்ற சச்சினுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது. அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மாஸ்டர் சச்சினுக்கு வாழ்த்துகள். இடைவிடாத கடின உழைப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் கனவுகள் நனவாகும் என்பதை எங்கள் தலைமுறையின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் காட்டியவர் நீங்கள் என்று கூறியுள்ளார்.