நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘தண்டேல்’. சந்து மொண்டட்டி இயக்கியுள்ளார். அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மூலம் பன்னி வாஸ் தயாரித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தமிழில் வெளியிடுகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் 7-ம் தேதி வெளியாகிறது.
அதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், “நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். ‘தண்டேல்’ ஒரு தரமான படைப்பாக வெளிவந்துள்ளது. இதன் கதை சிறியது. ஆனால் இயக்குனர் அதை வழங்கிய விதம் சிறப்பாக உள்ளது. கதைக்கான உரிமையை வாங்கினோம்.
இந்த படத்தின் 20 பேர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள். இதை ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கிய இயக்குனர் சந்துவுக்கு நன்றி. “கருணாகரன் தெலுங்கில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்,” என்றார். நாக சைதன்யா, சாய் பல்லவி, நடிகர்கள் கார்த்தி, ஆடுகளம் நரேன், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, கார்த்தி சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.