மதுரை: கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து குமரி மாவட்டம் மஞ்சலுகிராமத்தில் கொட்டிய லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த லாரிகளை திரும்ப ஒப்படைக்கக் கோரி உரிமையாளர் சிபு, விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லாரிகளை திருப்பி அனுப்ப முடியாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபு மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ”அண்டை மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்கு மருத்துவக் கழிவுகளை கொட்டுவது கடும் குற்றம்; இதை அனுமதிக்க முடியாது. மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை திருப்பி அனுப்ப முடியாது.

இவ்வாறு மருத்துவ கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம். மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, லாரிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிடுகிறோம்.