சென்னை: தமிழ்நாடு உரிமையை தாரை வார்த்திருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இது தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம். மாநில அரசின் உரிமைகளையும், உழவர்களின் நலன்களையும் ஒன்றிய அரசிடம் தாரை வார்த்திருக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.