ஈரோடு : ஒரே நாளில் 100 வழக்குகள் வாங்கியது நான்தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர், “நாங்கள் பார்க்கதான் சிறியவர்கள், எங்களுடைய செயல் பெரிய அளவில் இருக்கும்.
ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பில், ஒரே நாளில் 100 வழக்குகள் வாங்கியது நான் மட்டும்தான். இந்த வழக்குகள் அனைத்தும் மக்களுக்காக போராடியதற்காகத்தான் கிடைத்தது” என தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல் என்று சமீபத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.