கர்நாடகா: பசுவை கடத்தினால் என்கவுன்ட்டர் என்று கர்நாடகா அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் பசுக்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த அம்மாநில அமைச்சர் மங்கல் வைத்யா, “பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் உரிமையாளர்களின் நலனைக் காக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது.
மேலும், பசுவை கடத்துவது தொடர்ந்தால், கடத்துபவர்களை நடுரோட்டில் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.