உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில் திரிவேணி சங்கமத்தில் பூடான் அரசர் புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்தியாவிற்கு வருகை தந்த பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
அவருடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் புனித நீராடினார். இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.