மும்பை: நெட் பிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் தனது மகளின் உடையை சரி செய்த செயலுக்கு அனைத்து தரப்பினர் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பாலிவுட் முன்னணி நடிகராக நிகழ்ந்த வருபவர் ஷாருக்கான். இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் ‘நெட்ஃபிக்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, ஷாருக் தனது மகள் சுஹானாவின் ஆடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் சரிசெய்தார். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இதை அடுத்து. ஷாருக்கான் ஒரு சிறந்த தந்தை, குழந்தைகளுக்கு எவ்வளவு வயதானாலும் தந்தை எப்போதும் தந்தைதான் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பொது வழியாக இருந்தாலும் தனது மகளின் ஆடையை சரி செய்து சா ஷாருகானுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது.