சென்னை: ஞானசேகரனுக்கு நாளை குரல் மாதிரி பரிசோதனை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதான ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரத்தை சரிபார்க்க ஆய்வகத்தில் குரல் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், ஞானசேகரனுக்கு நாளை குரல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, ஞானசேகரன் புழல் சிறையில் இருந்து தடயவியல் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படும்.