மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 700 கன அடியாக குறைந்துள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 479 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 318 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம், 110.54 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 110.51 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 79.13 டிஎம்சி.