அமெரிக்கா: ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐநாவின் மனித உரிமை அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியை முற்றிலும் நிறுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தன்னுடைய நோக்கத்தில் இருந்து விலகிச் செல்வதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இந்த வகையில் தற்போது ஐநா மனித உரிமை அமைப்பிலிருந்து விலகுவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.