மேஷம் – எந்தச் செயலிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் மாற்றங்களை செய்து முன்னேறுவீர்கள். வெளிநாட்டு ஏற்றுமதியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம் – வேலைக்கான நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். காதலில் சிக்கல்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி காண்பீர்கள்.
மிதுனம் – நெருங்கியவர்கள் உங்கள் பெயரைக் கெடுப்பதற்காக முயற்சி செய்யலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்படும். பங்குச் சந்தையில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
கடகம் – நிலையான வருமானத்திற்காக பாடுபடுவீர்கள். தொழிலில் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வீர்கள். அரசாங்க காண்ட்ராக்ட் பெற வாய்ப்பு உள்ளது.
சிம்மம் – காதலில் புது திருப்பங்கள் இருக்கும். தோட்டத் தொழிலில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலைப்பழுதால் சிரமங்கள் நேரலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கலாம்.
கன்னி – திருமண பேச்சுவார்த்தைகள் நடை பெறும். சிறிய வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். சேமிப்பை நிலம் வாங்க முதலீடு செய்வீர்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.
துலாம் – வியாபாரத்தில் இடையூறுகளை சந்திக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். நம்பியவர்கள் உதவியளிக்க மாட்டார்கள். தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம் – குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அரசாங்க வேலைவாய்ப்பு பெற்றவர்கள் உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. கட்டுமானத் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
தனுசு – சிறிய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களை பெற வாய்ப்பு உள்ளது.
மகரம் – குடும்ப செலவுகள் அதிகரிக்கலாம். சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டி வரலாம். வியாபாரத்தில் முதலீடு செய்ய நேரிடும். பழைய கடன்களை அடைக்க திட்டமிடுவீர்கள்.
கும்பம் – உறவுகளை ஒருங்கிணைக்க பாடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள். காதலரின் உதவியால் பணக்கஷ்டத்திலிருந்து மீள்வீர்கள்.
மீனம் – தொழில் முன்னேற்றம் பெறும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். பைனான்ஸ் தொழிலில் லாபம் காண்பீர்கள்.