திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வார்டு 20 வடக்கு தையக்கார தெருவில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி சிலர் மர்ம பொருளை தண்ணீரில் வீசியுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேல்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பாலிதீன் பையில் சுற்றப்பட்ட மனித கழிவுகள் இருப்பதை கண்டனர்.
வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி. இதுகுறித்து தகவல் அறிந்த சங்கர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரில் கிடந்த மனித கழிவுகளை அகற்றி தொட்டியை முழுமையாக சுத்தம் செய்தனர். அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.
குடிநீரை தவிர மற்ற வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து திருச்சி நகர கோட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னணி என்ன? 20-வது வார்டு பகுதியில் வாகன திருட்டு, வழிப்பறி, அடிதடி, கத்திக்குத்து போன்ற சம்பவங்களில் குழந்தைகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதற்கு அப்பகுதியில் தாராளமாக கிடைக்கும் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களே காரணம் என கூறப்படுகிறது. கஞ்சா போதையில் சிலர் மனித கழிவுகளை தண்ணீர் தொட்டியில் கலக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.