சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த ஜன., 26-ம் தேதி வரை இல்லாமல், மொத்தம், 104 நாட்கள் பெய்தது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போல் இல்லாமல் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் போல் கொளுத்தும் வெயில் வாட்டி வதைக்கிறது.
பொதுமக்கள் காலை 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 11-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. காலையில் லேசான மூடுபனி இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.